Juegos De Motos
 

 

 

                 SCHOOL HISTORY     VISION & MISSION      OUR PRINCIPAL  STAFF     GALLERY
 

 
 
 
 
 
 
 
 
 
 
   
   
 

Prize Day - 2017

 
   
 
 

 

 
 
 

 
 

    யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்

யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையாக தரமுயர்வு........................................



இவ்வேளையில் கடந்த 2005 முதல் 2010 வரையான காலப்பகுதியில் பாடசாலையின் சாதனைகள் சிலவற்றை முன்வைப்பது பொருத்தமானது எனக் கூறினார். ஒரு பாடசாலையின் தரத்தைக்காட்டும் சுட்டியாக அதன் கல்விப்பெறுபேறுகள் விளங்குகின்றன. கடந்த 5 வருடங்களில் இப்பாடசாலையின் க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் திருப்திகரமானதாக அமைந்துள்ளன. விஞ்ஞானப்பிரிவில் சராசரி 52மூ சித்தியும் வர்த்தகப்பிரிவில் 88மூ சித்தியும் கலைப்பிரிவில் 90மூ சித்தியும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இ;வர்களில் 116 பேர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளதுடன் வருடாந்தம் 20இற்கு மேற்பட்டோர் கல்வியியற் கல்லூரியிலும் அனுமதி பெற்று செல்கின்றனர் என்றும் அதிபர் குறிப்பிட்டதுடன் க.பொ.த.(சா.த) பரீட்சையில் சராசரி 71மூ சித்தியடைந்து வருவதுடன் ஆங்கில மொழிமூலமாக கற்கும் மாணவிகள் தொடர்ந்து 100மூ சித்தியடைந்துவருவது குறிப்பிடத்தக்கதாகும். சமூகத் தொடர்பாடலுக்கு ஆங்கில மொழித்தேர்ச்சி மிக அவசியமானதாகும். நாம் பல்வேறு யுத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை வளர்ச்சியடையச் செய்து வருகின்றோம். இதனால் தரம் 6 13 வரையான மாணவிகள் அனைவரும் ஆங்கிலத்தை பேசுகின்றனர்.
எமது மாணவர்கள் இணைபாட விதானச் செயற்பாடுகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆங்கில தினப்போட்டிகள் ஆங்கில கவிதை நாடகம் உரை நாடகம் போன்றவை இதற்கு சான்றாகும். 2006 எமது மாணவி தேசிய மட்டத்தில் நடிப்புக்கான முதல் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் 2007, 2008ம் ஆண்டுகளில் எமது ஆங்கில நாடகம் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றும் தகுதியும் பெற்றது. யுத்த சூழ்நிலையால் 2007 இல் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. 2008 க்கான தேசியமட்டப் போட்டி 2010 இல் கொழும்பில் நடைபெற இருக்கின்றது. இதில் மாணவிகள் பங்குபற்ற தம்மை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
அழகியல் துறையில் எமது பாடசாலையின் நடனம் இசை நாடகம் நாட்டுக்
கூத்து சித்திரம் போன்றவை சிறந்த படைப்புக்களாக வெளிப்படுவதுடன் பல தரங்களில் வெற்றிகளை பெற்றதுடன் சபையினரின் மனதையும் ஈர்த்துக்கொண்டனவாக விளங்குகின்றன. நாட்டுக்கூத்து தொடர்ந்து மாகாண மட்டத்தில் 5 தடவைகள் வெற்றி பெற்றது குறி;ப்பிடத்தக்கது
விளையாட்டுத்துறையில் எமது பாடசாலை பல சாதனைகள் புரிந்துள்ளது. 1937 இல் எமது மாணவிகள் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு மேசைப்பந்து , ரெனிஸ் , ரெனிகுயிற, ஆகிய போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளனர். 1973இல் எமது வலைப்பந்தாட்ட அணி தேசிய மட்டத்தில் முதல் இடத்தைப்பெற்றது. 2005 தொடக்கம் 2010 வரை எமது கூடைப்பந்தாட்;ட அணியினர் தொடர்ந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
எமது பாடசாலை கல்வியுடன் மாத்திரம் நின்றுவிடாமல் சமூகத்திற்கு பொருத்தமான பிரசைகளையும் உருவாக்குகின்றமை குறிப்பிடத்தககது. கல்வி நிர்வாகம் பாடசாலையின் பழைய பாரம்பரியங்களையும் கட்டிக்காத்து வருகின்றது. எமது மாணவர்கள் எதிர்காலத்தில் தமது சொந்தக்காலில் நிற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலு; எமது மாணவர்கள் அரச அரச சார்பற்ற நிலையங்களில் உயர்ந்த பதவிகளை இன்று அலங்கரித்து வருகின்றனர்.
இன்று எமது பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட அதே வேளை சில சிக்கல்களுக்கும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளதை குறிப்பிட வேண்டும் பாடசாலையில் ஏற்படும் பௌதீக , ஆளணி , வளப்பற்றாக்குறைகள் நீங்குவதற்கு பெற்றோர் பழைய மாணவர்கள் கூடிய அக்கறை செலுத்துவதுடன் ஆசிரியர் கள் அனைவரும் அதன் உயர்வுக்காக அயராது உழைக்க வேண்டும். இன்றும் எமது பாடசாலையில் வைபவங்களின்N பாது ஒன்றுகூடுவதில் ஒரு பொது மண்டபம் இல்லாதது n பரும் குறைபாடாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடர்வதற்கு இங்கு சமூமளித்துள்ள பிரமுகர்கள் வழிசெய்ய வேண்டுமென கேட்டுக்n;காண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுனர் மேஜர் ஜெனரல் பு.யு.சந்திரசிறி அவர்கள் நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ள இப் பாடசாலை கடந்த காலங்களில் நாட்டில்; பல முதலிடங்களைப் பெற்ற முன்னனிப் பாடசாலையாகத் திகழ்ந்துள்ளது. இங்கு கல்வி கற்ற பழைய மாணவிகள் இன்று உயர்ந்த பதவிகளில் காணப்படுகின்றனர். இந்நிகழ்வு யாழ்ப்பாண கத்தோலிக்க மாணவர்களுக்கு கத்தோலிக்க பின்ணியுடன் கூடிய சூழலினைக் கொண்ட தேசியப் பாடசாலையின் கல்வியைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றுத்தந்துள்ளது. நீண்டகால இன்னல்கள் மறைந்து அமைதியான சூழல் ஒன்று உருவாகியுள்ள இவ் வேளையில் பெற்றோர்களும் தற்போதுள்ள ஆசிரியர்களும் இச் சந்தர்ப்பத்தை பற்றிப்பிடித்து கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த அறிவுள்ள மாணவர்களை உருவாக்கி இழந்தவைகள் அனைத்தையும் மீளப் பெற்றுக்கொள்ள பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஆயர் அவர்கள் தமது உரையில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க பெண்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இப் பாடசாலை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என 1998 முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது நிறைவேறாமல் போனது பற்றிய குறை மனதில் இருந்தமை காரணமாக நாட்டின் மேன்மை தங்கிய ஜநாதிபதி அவர்கள் தன்னை சந்தித்த வேளையில் தான் இவ் வேண்டுகோளை சமர்ப்பித்த போது அவர் அதை ஏற்றுக்கொண்டு அதற்கான ஆணையை அருகில் இருந்த தற்போதய வடமாகாண ஆளுநரிடம் பிறப்பித்ததையும் பின்னர் தன்னை சந்திப்பதற்காக வருகை தந்த ஜனாதிபதியின் மனைவியிடம் இதுபற்றி துறிப்பிட்ட வேளையில் தானும் ஓர் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றவர் எனக் கூறி திருக்குடும்ப கன்னியர்களது கல்விச் சேவையை நன்றியுடன் நினைவு கூர்ந்ததையும் குறிப்பிட்டு பலரது முயற்சியால் இன்று இப் பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். இன்னும் இன்று இப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் முன் ஒரு பெரும் பணி ஒப்புவிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். பாடசாலையின் தரம் உறுதிப்படுத்தப்படுவதில் ஆசிரியர்கள் அக்கறையுடனும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவியும் பாடசாலையின் சிரேஸ்ட இளைப்பாறிய ஆசிரியையுமான செல்வி வயலற் இம்மானுவல் அவர்கள் உவையாற்றினார். இவர் பாடசாலையின் வரலாற்றினை ஆரம்பம் முதல் இன்று வரை மிகவும் தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் கூறி இன்று இப் பாடசாலை தேசியப் பர்டசாலையாக தரமுயர்த்தப்படுதவற்கு இப் பாடசாலையில் தமது கடின உழைப்பை வழங்கிய வழங்கிய பழைய அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். பாடசாலை தனது வரலாற்றின் தனது 148 வது வருடத்தை தொட்டு நிற்கும் இவ்வேளையில் பாடசாலையின் தரமுயர்வு கடவுளின் அருள் நிறைந்த வழிகாட்டலினால் கிடைத்ததொன்றாகும். தொடர்ந்தும் இறை அருளுடன் இப்பாடசாலையின் பணி சிறக்கும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. ஆங்கிலப் பாடல்களும் பரதநாட்டிய நிகழ்வுகளும் அனைவரது மனங்களையும் ஈர்த்த தரமான படைப்புகளாய் அமைந்திருந்தன. நேர முகாமைத்துவம், ஒழுங்கமைப்பு, மாணவர் ஒழுங்கு, ஆசிரியர் கூட்டுறவு அனைத்தும், பாடசாலையின் தரத்திற்கும் ஒரு சான்றாக அமைந்தமை, அதற்கு கிடைத்த ஒரு சிறப்பு பேறாகும் என்பது உண்மையாகும்.
 

Photoes

 

 

 

 

 

 

 

 

   All Rights Reserved. Holy Family Convent 2010